வேகமாய்
கடக்கும் மரங்கள்...
உயரமாய்
பறக்கும் பறவைகள்...
அருகில் அமர்திருக்கும்
ஜன்னல் கம்பிகள்...
என் கவனத்தை
ஈர்க்க முயலும்,
மோதும் காற்றுமாய்...
நான் ரசிக்க
ஆயிரம் இருப்பினும்,
என்னை ரசித்த
உன்னையே நினைக்கிறேன்
என் பயணத்தில்...
அன்று உன்னைப் பார்த்தது,
அன்று உன்னுடன் பேசியது,
அன்று உன்னில் புதைந்தது,
என்று "அன்றையே"
நினைக்கச் செய்கிறாய்...
தனிமை துயரைப்
போக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...
விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...
என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..."
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20