வேகமாய்
கடக்கும் மரங்கள்...
உயரமாய்
பறக்கும் பறவைகள்...
அருகில் அமர்திருக்கும்
ஜன்னல் கம்பிகள்...
என் கவனத்தை
ஈர்க்க முயலும்,
மோதும் காற்றுமாய்...
நான் ரசிக்க
ஆயிரம் இருப்பினும்,
என்னை ரசித்த
உன்னையே நினைக்கிறேன்
என் பயணத்தில்...
அன்று உன்னைப் பார்த்தது,
அன்று உன்னுடன் பேசியது,
அன்று உன்னில் புதைந்தது,
என்று "அன்றையே"
நினைக்கச் செய்கிறாய்...
தனிமை துயரைப்
போக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...
விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...
என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..."
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20
தனிமை துயரைப்
ReplyDeleteபோக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...
விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...
இந்த வரிகள் மிக அழகு
ரொம்ப நல்லாயிருக்கு வாணி
தொடருங்கள்...
வாழ்த்துக்களுடன்
நிகில்
2 நிகில்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா...
உயீர் வரிகளுக்கு உயீர் கொடுத்த உத்தமி ........................ தொடரட்டும் .........................உயீர் உள்ள வரை ........................................
ReplyDeleteஉன்னை புரிந்து
ReplyDeleteபிரிந்த பயணம்...
என்னை புரியா சூழலில்
உன்னை மட்டும்
உணர்கின்றேன்.....
......தனியாக.
2 சங்கர்,
ReplyDeleteமீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி தோழா... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் கவிதையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....
2 ஸ்டீபன்
மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி தோழா...
HAI VANI...
ReplyDeleteஎன் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..." ROMBA NALLA IRUKKU.. MATHI..
very nice ............
ReplyDelete2 மதி
ReplyDeleteவருகைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி தோழா...
2 அருள்குமார்
நன்றி தோழா...
அதிக வேலையின் காரணமாக என்னால் கவிதைகள் எழுத முடியாமல் போனது... மனிக்கவும்...
தோழி,
வாணி...
உங்கள் கவிதைகள் மிக ஆழமானவை
ReplyDeleteவாழ்த்துக்கள் ......
நன்றி
வ.மதுசன்
2 மதுசன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...