அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....
சற்று முன் பிறந்த பனித்துளி...
தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....
இனம் புரியா..
இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...
முதன் முதலாய் முத்தமிட்டது..
தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....
அட ...!
எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!
வர்ணிக்க தெரியா
பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!
ஒய்யாரமாய் பறந்து வந்த
பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!
பயந்து போன பனித்துளி...
மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....
வேறொன்றை
மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....
யாருக்கு புரியும்.....
இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!
--- படித்ததில் பிடித்தது....
அதிகமான வேலையின் காரணத்தினால் என்னால் கவிதைகள் எழுத முடியாமல் போனது. மன்னிக்கவும்...
ReplyDeleteதோழி,
வாணி...
என்ன வாணி இப்படியான கவிதைத் திறனை ஒழித்து வைக்காதீர்கள்
ReplyDeleteதொடர்ந்து நிறைய எழுதுங்கள்
மேகத்தில் பிறந்து உன்
ReplyDeleteதேகத்தை உணர்ந்த தருணங்களில்...
மலர் புசிக்க வந்தவனால்
மடல் இடறி மணல் புகுந்தேனடி...
பூவே...
பனித்துளிகள் பிடிக்கும்
ReplyDeleteபாட்டம் பூச்சி தன் இறக்கையில்
தவமிருக்கு ...........
ரொம்ப அழகான கவிதைகள்
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள்
2 தியா
ReplyDeleteநன்றி தோழா...
2 சந்தன சங்கர்
வழக்கம் போல அருமை...
நன்றி தோழா...
2 மதுசன்
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...