Thursday, February 24, 2011
நீ இல்லாத நேரங்களில்
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...
Saturday, February 12, 2011
வரமும் தவமும்
உன்னோடு இருப்பதற்கும்
உன் நினைவோடு இருப்பதற்கும்
சிறு வித்தியாசம் தான்...
உன்னோடு இருப்பது "வரம்"
உன் நினைவோடு இருப்பது "தவம்"
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
Friday, February 4, 2011
அன்னை
அன்னையை பார்க்கும் போது,
உன்னை மறந்து போகிறேன்...
ஆனால்,
உன்னை பார்க்கும் போது
அன்னையை நினைவுபடுத்துகிறாய்...
Thursday, January 27, 2011
உன்னுடன்
உன்னுடன் நடக்கிறேன்...
உன்னுடன் ஓடுகிறேன்...
உன்னுடன் பாடுகிறேன்...
உன்னுடன் ஆடுகிறேன்...
உன்னுடன் சிரிக்கிறேன்...
உன்னுடன் அழுகிறேன்...
எல்லாமே உன்னுடன்தான்...
என்னுடன் இருக்கும் உன்னை
வேறு யாருக்கும் தெரிவதில்லை...
என்னை
ஏதேதோ பெயர்களில்
அழைக்கிறார்கள்...
எல்லா அழைப்புகளும்
உன் பெயர்களாகவே கேட்க்கிறது...
என்னை யாராவது
பைத்தியம் என்றழைத்தால்
மட்டும்
உன்னுடன் கோபம்கொள்கிறேன்....!!!
Wednesday, January 12, 2011
Tuesday, January 11, 2011
நான்
உன் அருகினில் இருப்பவள்
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவள்
என்றும்...
Saturday, January 8, 2011
உன் ஒற்றைப் பார்வை
சந்திக்கும் வேளைகளில்
சிந்திக்க நேரமில்லை
உன்னுடன் பேச
நான் இட்ட பட்டியல்களை...
முகம் பார்க்க முடியாமல்
வெட்கத்தின் போர்வையில்
மண்ணைக் கிளரும் கோழியாக
உன் முன்
தலை குனிந்தபடி நான்...
கவிதை சொல் endru
கேட்க்கும் உன்னிடம்
நொடிக்கொரு முறை
என் மௌனம் உச்சரிக்கும்
உந்தன் பெயர்
உன் காதில் விழவில்லையா? என
எப்படிக் கேட்பேன்...
அம்மாவின் நெற்றி முத்தம்...
அப்பாவின் கேச வருடல்...
அண்ணனின் செல்ல அடி...
நண்பனின் தோள் அணைப்பு...
என அத்தனையையும்
ஒரே நொடியில் தருகிறது
உன் ஒற்றைப் பார்வை...
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20
Saturday, January 1, 2011
இனிய புத்தாண்டு 2011 வாழ்த்துக்கள்
கண்ணீர் சிந்துவதை விட,
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து….
உலகம் உன்னை போற்றும்...
இந்த புதிய வருடம்
உனது இலட்சியங்கள்
அனைத்தும் நிறைவேற
இறைவனை வேண்டிகொள்கிறேன்…
அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு 2011
வாழ்த்துக்கள்...
Tuesday, December 28, 2010
உன் கோவமும் அன்பும்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...
உணர்ந்தேன்
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...
நீ இல்லாத நேரங்களில்...
Sunday, December 26, 2010
உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...
Saturday, December 25, 2010
Tuesday, December 21, 2010
நாட்கள் இல்லை
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...
ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...
Saturday, December 18, 2010
என்னை மறந்துவிடாதே
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....
Tuesday, December 14, 2010
Monday, November 29, 2010
உள்ளச் சிறையில் நான்
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.
Monday, October 11, 2010
ஒற்றை பனித்துளி
அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....
சற்று முன் பிறந்த பனித்துளி...
தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....
இனம் புரியா..
இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...
முதன் முதலாய் முத்தமிட்டது..
தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....
அட ...!
எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!
வர்ணிக்க தெரியா
பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!
ஒய்யாரமாய் பறந்து வந்த
பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!
பயந்து போன பனித்துளி...
மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....
வேறொன்றை
மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....
யாருக்கு புரியும்.....
இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!
Tuesday, July 13, 2010
என் பயணங்களில்
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20
