Wednesday, August 19, 2009

உண்மை...

நீ என்னருகினில் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்...

Wednesday, August 12, 2009

தேவதையின் குணங்கள்

உன் கண்களில்
வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும்
கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை
நட்பு இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்???...

உன் பெயர்..

எத்தனையோ முறை
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!

மறந்துவிட்டேன்

உன்னை மறக்க நினைத்திருந்தேன்..
ஆனால்,
தொடரும் உன் நினைவுகளால்
அந்த நினைப்பையே
நான் மறந்துவிட்டேன்...!!

Monday, August 10, 2009

புரிந்து கொள்க...

நம்மை புரிந்து கொள்ளாத எதுவும்
நம்மை நினைப்பதில்லை...
நம்மை புரிந்து கொண்ட எதுவும்
நம்மை விட்டு விலகுவதில்லை...

வெற்றிப் பயணம்

உன் இதயத்தை மட்டுமே
இலக்காக நினைத்து கொண்டு,
இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் நட்பு!!!!!

Saturday, August 8, 2009

உயிர் உள்ளவரை

ஜீவன் உள்ளவரை மனிதன்..
பணம் உள்ளவரை மரியாதை..
நேசம் உள்ளவரை பாசம்..
என் உயிர் உள்ளவரை நம் நட்பு ....

Thursday, August 6, 2009

கவலை

நேரம் போவதுகூட தெரியாமல்
உன்னோடு பேசி கொண்டிருக்கையில்,
ஒரே ஒரு கவலை எனக்கு
இந்த நேரம் ஏன் போகிறது என்று...!

முடிவு

மழையின் முடிவு மண்ணில்..
நதியின் முடிவு கடலில்..
காற்றின் முடிவு...?
அதுவே நம் நட்பின் முடிவு....

நட்பால்

ஆண்பால்,
பெண்பால்,
இரண்டும்
பொதுவானது
நட்பால்....