Thursday, October 8, 2009

நீ வேண்டும் தோழா

சூரியன் உதிக்க
வானம் வேண்டும்....
மரம் வளர
நிலம் வேண்டும்...
மீன் வாழ
தண்ணீர் வேண்டும்...
என் உயிர் வாழ
நீ வேண்டும் தோழா...

அழகு காலம்

மழை காலம்,
கார்காலம்,
பனிக்காலம்...
எந்த மாதம் என்று எனக்கு தெரியாது...
ஆனால்,
நீ பிறந்த மாதம்
எனக்கு அழகு காலம்...

ஜீவ மொழி

என் மனதெனும் பூட்டை
உன் நட்பெனும் சாவியால் திறந்தாய்.
என் வாழ்வு சந்தோசமானது...
உன் வருகையால்
என் சுவாசம் என்றும்
உன் நட்பு ஒன்றிற்காக தான்...
என் மனதில் உயிர் உள்ள ஜீவ மொழி
உன் வார்தைகள் தான்...

Wednesday, September 30, 2009

சாய்ந்து விட்டு போ

உன் வீட்டு வாசலில்
உள்ள மரம் நான்.
தினமும் ஒரு முறையாவது
என் மீது சாய்ந்து விட்டு போ.
என் அன்பு உன் மீது
பூக்களாக மலரும்...

இதயத்துடிப்பாய்...

எவ்ளவோ பேசினோம்
இரவு பகலென்று பாராமல்,
இருந்தும் மறக்க முடியவில்லை
நீ என் மேல் காட்டும் அன்பு
நீ பேசும் அன்பான வார்த்தைகள்
இன்னும் ஒலித்து கொண்டே உள்ளது
என் இதயத்துடிப்பை போல.

கடவுளுக்கு நன்றி

உன் நட்பின் ஒளியால்
என் உள்ளம் பிரகாசிக்க...
என் சோகங்கள் சிதறின...
என் கனவு கவிதை ஆயின...
வெண்மதியை தூது அனுப்பி
கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்
உன்னை எனக்கு தந்தமைக்கு...

உனதுயிர் ஆனேன்

பண்பை காட்டினாய்
நேர்மை ஆனேன்...
அறிவை காட்டினாய்
விவேகம் ஆனேன்...
அன்பை காட்டினாய்
தாகம் ஆனேன்...
உறவை காட்டினாய்
உனதுயிர் ஆனேன்...

என்ன தந்தாய்....

நட்பை தந்தாய் வாழ்வு இனித்திட...
கவிதை தந்தாய் உறவு வளர்த்திட...
பாடல் தந்தாய் மனம் குளிர்திட....
இ-மெயில் தந்தாய் என் நாளை உயிர்த்திட...

உன் பெயரை சொல்வேன்

உலகத்தில் அழகான கவிதை
எது என்று கேட்டால்
உன் நட்பு என்பேன்...
நட்பை கேட்டால்
என் உயிர் என்பேன்...
உயிரின் பெயரை கேட்டால்
உன் பெயரை சொல்வேன்....

Tuesday, September 15, 2009

நீ என்னுடன் இல்லை

இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க
நீ என்னுடன் இல்லை !
பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது

கருத்து பறிமாற்றத்திற்கு
நீ என்னுடன் இல்லை !
மனதின் ஆர்வம் குறைகின்றபோது

உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க
நீ என்னுடன் இல்லை !
ஆனால்,

நான் நினைக்கும்போது இதயத்தில்
உணர்வுகளில் என் உயிரினில்
நீ கலந்து இருக்கிறாய் !!!