Tuesday, September 15, 2009

நீ என்னுடன் இல்லை

இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க
நீ என்னுடன் இல்லை !
பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது

கருத்து பறிமாற்றத்திற்கு
நீ என்னுடன் இல்லை !
மனதின் ஆர்வம் குறைகின்றபோது

உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க
நீ என்னுடன் இல்லை !
ஆனால்,

நான் நினைக்கும்போது இதயத்தில்
உணர்வுகளில் என் உயிரினில்
நீ கலந்து இருக்கிறாய் !!!

3 comments:

  1. என் கவிதைகளையும் சற்று நேரம் கிடைத்தால் பாருங்கள்.

    ReplyDelete
  2. வாணி,

    ஒற்றையடி பாதையில்
    நட்பின் மலர்களை மட்டும்
    சேகரிக்கும் நீங்கள்.....
    அன்பு
    துக்கம்
    பாசம்
    மகிழ்ச்சி
    பிரிவு
    பரிவு
    ஏக்கம்
    தாக்கம்
    சோகம்
    விரக்தி
    ஏழ்மை
    நினைவு
    கனவு
    என எல்லாம் நிறைந்திட்ட
    விசயங்களில் பகிர்ந்திடுங்கள்
    உங்கள் ஆறுதலுக்கும்
    நட்பிற்கும் இங்கு எப்பொழுதும்
    திறந்திருக்கும் வாசலாய், வாசமாய்...

    ReplyDelete