Monday, August 31, 2009

நினைவுகள்

நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்,
நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு
பிரிந்து செல்வதில்லை...

உணரும் வரை...

உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்.
புரிகின்ற வரை
வழியும் ஒரு புதிர் தான்.

Saturday, August 29, 2009

சிறந்தது

உலகினில் சிறந்தது உயிர்கள்...
உயிர்களில் சிறந்தது மனிதன்...
மனிதர்களில் சிறந்தது பெண்கள்...

பெண்களில் சிறந்தது நீ...
உன்னுள் சிறந்தது ???
உன்னுடையது எனப்படும்
அனைத்துமே சிறந்தது தானே...

Thursday, August 27, 2009

என்றும் நான் உண்டு...

உன் அன்பை சுமக்க
இதயம் உண்டு...
உன்னை பார்க்க
கண்கள் உண்டு...
உன் பேசை கேட்க
செவி உண்டு...
உன்னையே நினைத்துக்கொண்டிருக்க
என்றும் நான் உண்டு...

துணையாக..

நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....

Saturday, August 22, 2009

உன் நட்புடன் வாழ..

உயிருடன்
வாழ
ஒரு பிறவி
போதும்...
உன் நட்புடன்
வாழ

பல ஜென்மங்கள்
வேண்டும்...

Wednesday, August 19, 2009

உண்மை...

நீ என்னருகினில் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்...

Wednesday, August 12, 2009

தேவதையின் குணங்கள்

உன் கண்களில்
வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும்
கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை
நட்பு இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்???...

உன் பெயர்..

எத்தனையோ முறை
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!

மறந்துவிட்டேன்

உன்னை மறக்க நினைத்திருந்தேன்..
ஆனால்,
தொடரும் உன் நினைவுகளால்
அந்த நினைப்பையே
நான் மறந்துவிட்டேன்...!!