Tuesday, September 15, 2009

நான் மட்டும்

உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உன்டு...
உன் நட்புக்காக இதயத்தையே

கொடுக்க நான் மட்டும் உன்டு...

நேசி

அழகை நேசிக்காதே
அறிவை நேசி !
பணத்தை நேசிக்காதே

பாசத்தை நேசி !
ஆடம்பரத்தை நேசிக்காதே

அடக்கத்தை நேசி !
ஆணவத்தை நேசிக்காதே

அன்பை நேசி !
ஏனெனில்,
ஆணவம் அழிவுப்பாதையை

விரைவில் நோக்கி செல்லும் !!!

நட்பு வாடினால்

மரம் வாடினால்
தண்ணீரை விடுவேன் !
மனம் வாடினால்

கண்ணீரை விடுவேன் !
நம் நட்பு வாடினால்,

என் உயிரை விடுவேன் !!!

Thursday, September 10, 2009

என்றும் அழகு

செடியில் பூக்கும்
பூவை விட,
ஒரு நொடியில் பூக்கும்
உன் புன்னைகை
என்றும் அழகுதான்
எனக்கு...

இதய துடிப்பு

இடி இடிப்பது
மழைக்காக...
என் இதயம் துடிப்பது
உனக்காக...

வாங்கித் தருகிறேன்

என்ன வேண்டும் கேள்.
வாங்கித் தருகிறேன்
என்னை விற்றாவது...

Monday, September 7, 2009

மனமில்லை

விக்கல் வரும்போது,
தண்ணீர் குடிக்க
மனமில்லை..
நினைப்பது
நீ என்பதால்
நீடிக்கட்டும்
சில நிமிடங்கள்
என்று..

Saturday, September 5, 2009

சூரியகாந்தி பூ

சூரியனை பிரிந்து
உறங்காமல்
தேய்ந்து கொண்டிருக்கும்
நிலவு போல இருந்த
நான்
இன்று,
ஏனோ உணர்கிறேன்,
உன் அன்பை
சூரியனை பார்த்த
சூரியகாந்தி பூ போல....

நேரம்

துடிப்பதை விட.......
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்துக்கு....

விடுமுறை

நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை
வானத்தில்....
ஆனால்,
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை
இல்லை என் மனதில்...