களிமண் திட்டாய் நாம் கிடந்தோம்...
ஞாலகுயவன் நமை எடுத்து வனைந்தான்.
இரு வகை பாத்திரமாய்...
சட்டி என்று எனை சொன்னார்,
பானை என்பது உன் பெயராம்...
என்னில் கொதித்த உலை நீரை,
உன்னில் வடித்தல் என் நியதி...
என்னில் சமைத்த சோற்றோடு,
இனிதாய் இணையும் உன் குழம்பு...
அடுக்கி வைத்த அடுக்களையில்,
முடுக்கி வைத்த காதலுடன்...
எதனை தத்துவம் பேசுகிறோம்
எனினும் மனிதர் புரிவதில்லை...
கழுவி வைக்கும் வேளையிலே,
தழுவி கொள்வோம் தற்செயலாய்...
இணைந்த ஜென்ம பயணத்தில்,
இதயம் அழுத்தும் ஓர் கவலை...
வனைந்த பாண்டம் அத்தனையும்,
உடைந்தே தீரும் உலக விதி...
ஒன்றை இருவரும் உடைவோமா...!
மீண்டும் படுகை அடைவோமா...!
------ நாளேடு ஒன்றில் படித்தது...
அருமையான கவிதை வாணி.
ReplyDeleteஇக்கவிதையை எழுதியவர் : ஆரூர் புதியவன்.
ஆனந்தவிகடன் வார இதழில் 25/04/2004 ஆம் நாளில் வெளி வந்தது.
அந்த கவிதையின் பக்கத்தை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
காதல் உடையாத பானை......................... என்றும்
ReplyDelete2 சத்ரியன்
ReplyDeleteஉங்களுடைய வருகைக்கும், தகவலுக்கும் நன்றி தோழா... தொடர்ந்து வாருங்கள்...
2 ஸ்டீபன்
உங்களுடைய வருகைக்கு நன்றி தோழா... தொடர்ந்து வாருங்கள்...