Monday, November 30, 2009

என் இதயம்

என்னைப் பார்த்து கேட்கிறார்கள்
"இதயத்தில் இருக்கும் உன் நண்பன் யார்?"
என்று ...
பாவம், அவர்களுக்கு தெரியாது,
"என் நண்பன் தான் என் இதயம்"
என்று...

Saturday, November 28, 2009

நூறுமுறை இறப்பேன்

நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் நட்பு கிடைக்கும் என்றால்...

என்றாவது ஒரு நாள்

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
என்னை காணத்துடிக்கும்
உன் கண்களுக்கு சொல்லி வை
என்றாவது ஒரு நாள்
என் உறவை காண்பாய் என்று...
அது வரை வானத்தில் தெரியும்
வானவில்லை பார்த்து ரசி...

எக்கரையில்

நீயோ அக்கரையில்
நானோ இக்கரையில்
நாம் கொண்ட
நட்பு எக்கரையில்....?

Thursday, November 26, 2009

சிறை

சிறைப்பட்டுப் போனேன்
ஆம், உண்மை தான்
சிறையில் அல்ல,
உன் ஷ்நேகிததில்...

என்றும் ஓய்வதில்லை

கடல் அலைகளும்
ஒருநாள் ஓயலாம்...
ஆனால்,
உன் நினைவலைகள்
என்றும் ஓய்வதில்லை
என் மனதில்...

Wednesday, November 25, 2009

நம் இதயங்கள்

வார்த்தைகள்
ஊமையாகிப் போகின்றன...
நம் இதயங்கள்
பேசிக் கொள்வதால்...

Tuesday, November 24, 2009

காதல் கொண்டேன்

முதலில் நட்பு கொண்டேன்
பிறகு காதல் கொண்டேன்
ஆம்,
நட்பு கொண்டது உன் மீது...
காதல் கொண்டது உன் நட்பு மீது...

காதலித்துப் பார்

கண்ணீர் மட்டுமல்ல
உன் கனவுகளும்
உன்னைக் காயப்படுத்தும்
காதலித்துப் பார்...

காதல்

காதல்,
சிலருக்கு வரமாய்
சிலிர்க்கிறார்கள்...
சிலருக்கு வலையாய்
சிக்கிக்கொள்கிறார்கள்...