Friday, May 28, 2010

உயிர்ச் சித்திரம்

அடி, முடி தேடினாலும்,
அகராதியை புரட்டினாலும்,
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
நம் நட்பு தோழா...

Thursday, May 20, 2010

சட்டி பானை காதல் கதை / கவிதை

காலம் என்னும் படுகையிலே,
களிமண் திட்டாய் நாம் கிடந்தோம்...

ஞாலகுயவன் நமை எடுத்து வனைந்தான்.
இரு வகை பாத்திரமாய்...

சட்டி என்று எனை சொன்னார்,
பானை என்பது உன் பெயராம்...

என்னில் கொதித்த உலை நீரை,
உன்னில் வடித்தல் என் நியதி...

என்னில் சமைத்த சோற்றோடு,
இனிதாய் இணையும் உன் குழம்பு...

அடுக்கி வைத்த அடுக்களையில்,
முடுக்கி வைத்த காதலுடன்...

எதனை தத்துவம் பேசுகிறோம்
எனினும் மனிதர் புரிவதில்லை...

கழுவி வைக்கும் வேளையிலே,
தழுவி கொள்வோம் தற்செயலாய்...

இணைந்த ஜென்ம பயணத்தில்,
இதயம் அழுத்தும் ஓர் கவலை...

வனைந்த பாண்டம் அத்தனையும்,
உடைந்தே தீரும் உலக விதி...

ஒன்றை இருவரும் உடைவோமா...!
மீண்டும் படுகை அடைவோமா...!

------ நாளேடு ஒன்றில் படித்தது...

என்றும்

அன்று எப்படியோ
இன்றும் அப்படியே
என்றும் மாறாது
உன்மீதான என் அன்பு...

Saturday, May 15, 2010

நானும் சிவந்தேன்

அந்திவானம்,
அலையில்லா கடலை அணைத்து
சிவப்பைப் பூசிக்கொள்ள
அதைக் கண்ட நானும் சிவந்தேன்
என்னில் உன் நினைவுகள் இருப்பதாலேயே...

Saturday, May 8, 2010

காதலா? நட்பா?

உன் மனதை எனக்கு கொடுத்துவிட்டு,
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்?
காதலா இல்லை நட்பா,
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக...

இரு விழிகள்

நட்பும் காதலும் இருவிழிகள்...
இங்கே,
ஒரு விழி போதுமென்றால்,
உன் வழியில் தெளிவில்லை...
இரு விழியும் வேண்டுமென்றால்,
என்னோடு கைகோர்த்து நட
இருவிழியைக் கொண்டு,
ஒருவழியில் நடப்போம்
அழகாக....!