Tuesday, December 28, 2010

உன் கோவமும் அன்பும்

உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...

உணர்ந்தேன்

பிறப்பை
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...

நீ இல்லாத நேரங்களில்...

Sunday, December 26, 2010

உறக்கத்தில்

உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...

நான்

உன்னை,
உறக்கத்தில் நினைப்பவள்
அல்ல நான்,
உறங்காமல் நினைப்பவள்
என்றும்...

Saturday, December 25, 2010

பிறக்கிறாய்

என்னை விட்டு
பிரிந்தும்,
தினம் தினம்
பிறந்துகொண்டே
இருக்கிறாய்

நினைவுகளால்...

Tuesday, December 21, 2010

நாட்கள் இல்லை

வின்னில நிலவு
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...


ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...

Saturday, December 18, 2010

என்னை மறந்துவிடாதே

பூத்த மலரை கிள்ளிவிடாதே...
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....

Tuesday, December 14, 2010

உன் நினைவுகள்


உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...

Monday, November 29, 2010

உள்ளச் சிறையில் நான்

உள்ளச் சிறையில் நான்
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.

Monday, October 11, 2010

ஒற்றை பனித்துளி

அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....

சற்று முன் பிறந்த பனித்துளி...

தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....

இனம் புரியா..

இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...

முதன் முதலாய் முத்தமிட்டது..

தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....

அட ...!

எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!

வர்ணிக்க தெரியா

பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!

ஒய்யாரமாய் பறந்து வந்த

பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!

பயந்து போன பனித்துளி...

மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....

வேறொன்றை

மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....

யாருக்கு புரியும்.....

இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!--- படித்ததில் பிடித்தது....

Tuesday, July 13, 2010

என் பயணங்களில்

வேகமாய்
கடக்கும் மரங்கள்...
உயரமாய்
பறக்கும் பறவைகள்...
அருகில் அமர்திருக்கும்
ஜன்னல் கம்பிகள்...
என் கவனத்தை
ஈர்க்க முயலும்,
மோதும் காற்றுமாய்...

நான் ரசிக்க
ஆயிரம் இருப்பினும்,
என்னை ரசித்த
உன்னையே நினைக்கிறேன்
என் பயணத்தில்...

அன்று உன்னைப் பார்த்தது,
அன்று உன்னுடன் பேசியது,
அன்று உன்னில் புதைந்தது,
என்று "அன்றையே"
நினைக்கச் செய்கிறாய்...

தனிமை துயரைப்
போக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...

விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...

என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..."


- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20

Friday, July 9, 2010

உன் நினைவில்

என் மனதை,
உன் நினைவுகளால்
நிரப்பியுள்ளேன்...

என் இதயம்,
உன்னை நினைப்பதாலேயே
துடிக்கிறது...

நாளும் உன் நினைவில்
நீளும் என் ஆயுள்...

Tuesday, June 29, 2010

என் உலகம்

உலகிற்கு,
நீ யாரோ...!
எனக்கு,
நீயே உலகு...!

Tuesday, June 15, 2010

அன்பு

அன்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...

Tuesday, June 1, 2010

ஒன்றே

இரவு பகல் இரண்டானாலும்
நாள் என்பது ஒன்றே...
கண்கள் இரண்டானாலும்
பார்வை என்பது ஒன்றே...
சிறகுகள் இரண்டானாலும்
பறப்பது என்பது ஒன்றே...
இதயம் இரண்டானாலும் - நம்
அன்பு என்பது ஒன்றே...

எளிது

இறப்பது எளிதே
எனக்கு...
உன்னை
மறப்பதைக் காட்டிலும்...

Friday, May 28, 2010

உயிர்ச் சித்திரம்

அடி, முடி தேடினாலும்,
அகராதியை புரட்டினாலும்,
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
நம் நட்பு தோழா...

Thursday, May 20, 2010

சட்டி பானை காதல் கதை / கவிதை

காலம் என்னும் படுகையிலே,
களிமண் திட்டாய் நாம் கிடந்தோம்...

ஞாலகுயவன் நமை எடுத்து வனைந்தான்.
இரு வகை பாத்திரமாய்...

சட்டி என்று எனை சொன்னார்,
பானை என்பது உன் பெயராம்...

என்னில் கொதித்த உலை நீரை,
உன்னில் வடித்தல் என் நியதி...

என்னில் சமைத்த சோற்றோடு,
இனிதாய் இணையும் உன் குழம்பு...

அடுக்கி வைத்த அடுக்களையில்,
முடுக்கி வைத்த காதலுடன்...

எதனை தத்துவம் பேசுகிறோம்
எனினும் மனிதர் புரிவதில்லை...

கழுவி வைக்கும் வேளையிலே,
தழுவி கொள்வோம் தற்செயலாய்...

இணைந்த ஜென்ம பயணத்தில்,
இதயம் அழுத்தும் ஓர் கவலை...

வனைந்த பாண்டம் அத்தனையும்,
உடைந்தே தீரும் உலக விதி...

ஒன்றை இருவரும் உடைவோமா...!
மீண்டும் படுகை அடைவோமா...!

------ நாளேடு ஒன்றில் படித்தது...

என்றும்

அன்று எப்படியோ
இன்றும் அப்படியே
என்றும் மாறாது
உன்மீதான என் அன்பு...

Saturday, May 15, 2010

நானும் சிவந்தேன்

அந்திவானம்,
அலையில்லா கடலை அணைத்து
சிவப்பைப் பூசிக்கொள்ள
அதைக் கண்ட நானும் சிவந்தேன்
என்னில் உன் நினைவுகள் இருப்பதாலேயே...

Saturday, May 8, 2010

காதலா? நட்பா?

உன் மனதை எனக்கு கொடுத்துவிட்டு,
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்?
காதலா இல்லை நட்பா,
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக...

இரு விழிகள்

நட்பும் காதலும் இருவிழிகள்...
இங்கே,
ஒரு விழி போதுமென்றால்,
உன் வழியில் தெளிவில்லை...
இரு விழியும் வேண்டுமென்றால்,
என்னோடு கைகோர்த்து நட
இருவிழியைக் கொண்டு,
ஒருவழியில் நடப்போம்
அழகாக....!

Saturday, April 24, 2010

தேடித் திரிகிறேன்

மணம் வீசும் உந்தன்
மனம் அறிவேன்...
மலர் அறியா தென்றலாய்,
உன்னைத் தேடித் திரிகிறேன்
இப்பூவுலகில்...

Wednesday, April 21, 2010

பிடிக்கிறது

கனவில் உன் நினைவு வருவதால்,
இரவைப் பிடிக்கிறது...
நினைவே நீயாக இருப்பதால்,
பகலை மிகவும் பிடிககிறது...

Thursday, April 15, 2010

இனிய குடும்பம்

இனிய குடும்பம்
இ - இருப்பதைக் கொண்டு
னி - நிறைவோடு வாழும்
ய - யதார்த்தமான குடும்பம்
இனிய குடும்பம்...

அன்பான கணவன்
அடக்கமான மனைவி
ஆஸ்திக்கொரு ஆண் மகனும்
ஆசைக்கொரு பெண் மகளுமாய்
அளவான குடும்பமும்
இனிய குடும்பமே...

வரவுக்கு மிஞ்சாத செலவாய்
செலவையும் மீறிய

சேமிப்பைக் கொள்ளும் குடும்பமும்
இனிய குடும்பமே...

அனைவரின் கருத்தையும்
அகத்தில் கொள்ளும் தலைவனும்,
அன்பே உருவான
புன்னகையை செம்மஞ்சலாய்
முகத்தில் பூசிய தலைவியும்,
அடங்கிய குடும்பமும்
இனிய குடும்பமே...

இருப்பதைக் கொண்டு
நிறைவோடு வாழும்
எல்லா குடும்பத்தின்
இலக்கணமும் இதுவே...

- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை .

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு

வாழ்வில்
எல்லா
வளமும்,
நலமும்,
பெருக
அனைவருக்கும்
மனமார்ந்த
இனிய
தமிழ்
புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...

Monday, March 29, 2010

காற்று

நான் வாழ,
என் இதயம் சுவாசிக்க,
எங்கு சென்றாலும்,
என்னை பின்தொடர்ந்து,
வரும் காற்று
உன் நினைவுகள்....

Wednesday, March 24, 2010

அவ்வளவு அன்பு

உனக்கு என்மீது
அவ்வளவு அன்பு உள்ளதா
என்கிறாய்...?
என்னிடம் உள்ள அவ்வளவும்
உன்மீதான அன்புதான்
என்று தெரிந்தும்...

Monday, March 22, 2010

எனதுயிர்

உன்னை நினைத்துக்கொண்டு
வாழவில்லை...
உன்னை நினைப்பதினாலேயே
வாழ்கிறது...
எனதுயிர்....

Friday, March 19, 2010

இருக்காது

உனக்குள் என் நினைவும்,
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை
இருக்காது
நமக்குள் பிரிவு...

Thursday, March 18, 2010

உயிர் வாழ்வேனோ...?

உயிர் கொடுப்பான் தோழன்
என்றுரைப்பதெல்லாம் பழமை...
என்னிடத்தில் உள்ளதே
உந்தன் உயிர் தானே... அதை
கொடுத்துவிட்டு ஒரு கணமேனும்
உயிர் வாழ்வேனோ...?

Tuesday, March 16, 2010

உன் நினைவுகளே வேண்டும்

முடிவில்லா வானில்
நான் பறக்க
முகவரியாய் தென்பட்ட
உன் நட்பை,
எத்தனை இடையூறுகள் வந்தாலும்
என் உயிர் உன்னை
இழப்பதில்லை தோழா...
உயிரினை தாங்க
உன் நினைவுகளே வேண்டும்
என்றும் எனக்கு...

Saturday, March 6, 2010

மீண்டும்

என் இதயத்தை வருடிச் சென்ற
இதமான நினைவுகளோடு
மீண்டும் கருவாக
ஆசைப் படுகிறேன்...

தொட்டுவிட முடியாத தூரத்தில்
நீயும் நானும்...
நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத நினைவுகளாய்
உயிர் பெற்றன என்னிடத்தில்...

Monday, February 15, 2010

என்ன செய்தாய்

கண்ணீர் சிந்தும் நண்பனை
கண்களில் வைக்கவேண்டும்...
கண்ணீர் சிந்தவிடாமல் காப்பவனை
இதயத்தில் வைக்கவேண்டும்...

அப்படியென்றால்,
நீ என்ன செய்தாய்...?
உன்னை என் உயிரினில் வைத்தேன்...

மனம் வாடும்

செடியை விட்டுப் பிரிந்தால்,
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...

Thursday, February 11, 2010

அதிகரிக்கிறது

அதிகரித்துக் கொண்டிருப்பது
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...

Wednesday, February 10, 2010

பொறாமை

உன்னை எப்போதும்
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?

இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...

Monday, February 8, 2010

வரமும் தவமும்

நான் வரம் பெற,
நீ செய்த தவம்
என்மீதான உன் அன்பு...

Saturday, February 6, 2010

தொலைத்துவிடுகிறேன்

எவ்வளவோ பத்திரமாக
வைத்திருந்தாலும்,
தொலைத்துவிடுகிறேன்
என்னை
உன் நினைவுகளில்...

Sunday, January 31, 2010

நீயே இருக்கிறாய்

நீயே இருக்கிறாய்
விடியுமுன் என் கனவிலும்...
விடிந்தபின் என் நினைவிலும்...

Wednesday, January 27, 2010

வருந்துகிறேன்

என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்...

Monday, January 25, 2010

இருண்ட வீடு

உன் நினைவு எனும்
ஒளி இல்லாவிடின்,
என் வாழ்வு என்றும்
இருண்ட வீடே...

Wednesday, January 20, 2010

பஞ்சம்

கல்தோன்றி மண்தோன்றா
காலத்தே முன்தோன்றிய
என் தமிழிலும்
வார்த்தைப் பஞ்சம்
உன்னைப் பற்றி
கவிதை எழுதும்போது...

Tuesday, January 19, 2010

உன் வருகை

எங்கோ தொலைந்த
என் சுவாசம்,

மீண்டும்
என்னிடமே வந்தடைந்தது
உன் வருகையால்...

Monday, January 18, 2010

சாதலும் சரியே

காதலுக்காக
சாதலும் சரியே...
காதலன் நீயென்றால்...!!!

Tuesday, January 12, 2010

ஏமாற்றங்கள்

ஏமாற்றங்களை
எதிர்பார்ப்பதில்லை...
ஆனால்,
எதிர்பார்ப்புகள் தான்
ஏமாற்றங்கள் ஆகின்றன...

Saturday, January 9, 2010

நீ போதும்

சுவாசிக்க காற்று
தேவை இல்லை..
நேசிக்க நீ
இருக்கும் போது...

Friday, January 8, 2010

நிலா

உன்னைத் தொட எண்ணி
உன் பின்னே வர,
இறுதியில்,
விண்ணை தொட்டேன்
என் நிலாப் பெண்ணே...!

Wednesday, January 6, 2010

நாம்

'நான்' என்பதை மறந்து,
'நாம்' என்கிறேன்
என்னுள் நீ இருப்பதால்...

Monday, January 4, 2010

உன்னைக் காண்கிறேன்

அருகில் இருக்கும் இமைகளைக்கூட
காண முடியாத என் கண்கள்,
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்
எவ்வாறு காண்கின்றன...?
ஆம்,
என் கண்கள் காணும்
ஒவ்வொரு நல்லவைகளிலும்
உன்னையே காண்கிறேன்...
இந்த உலகில் உள்ள
நல்லவைகள் அனைத்தையும்
ஒன்று சேர்த்து,
ஒரே உருவமாக்கி,
அதற்க்கு உயிரும் கொடுத்தால்,
அது நீயாக அல்லவா இருக்கும்...

Friday, January 1, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முயலும் வெல்லும்...
ஆமையும் வெல்லும்...
முயலாமை மட்டுமே தோற்கும்...

முயற்சிகள் தவறலாம்...
முயற்சிக்க தவறலாமோ...

உங்களின் அனைத்து முயற்சிகளும்
வெற்றிபெற வாழ்த்துக்கள்...
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு 2010
நல்வாழ்த்துக்கள்...