Saturday, December 26, 2009

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்
இல்லாமலா
உன்னை எனக்காகவும்,
என்னை உனக்காகவும்
ஈன்றடுத்தார்கள் நம் பெற்றோர்கள்...
சொல்?

உனக்கே பொருத்தமான
உயரத்துடன் என் வளர்ச்சி
நிற்குமா என்ன?

காதருகே ஒலிக்கும்
பாடலின் இசையை
உணர முடியாத நான்,
காற்றில் கலந்து வரும்
உன் சுவாசத்தை
எவ்வாறு உணர்ந்தேன்...!

என்னுடைய தலைசிறந்த ஆசான் நீ !
ஆம்! உலகத்தை ரசிக்கவும்,
கூடவே உன்னை ரசிக்கவும்
கற்று கொடுத்தாய் அல்லவா...!

நினைவில் நிற்க
மறுக்கிறது பாடங்கள்
காரணம்,
என் நினைவை முழுவதும்
அடைத்து கொண்டல்லவா
அமர்ந்திருக்கிறாய் நீ...!

எனக்கும் மேஜிக் தெரியும்.
என் கண் மூடி திறக்கும்
ஓவ்வொரு நொடியும்
உன்னை, என் கண் முன்னே
தோன்றி மறைக்கிறேனே...!

சிந்தனையில் நின்று
சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறாய்,
பல சமயம் சிறையும் வைக்கிறாய்...!

விழி பரிமாற்றம்,
மொழி இல்லா சம்பாசனைகள,
தொடுதலில்லா தீண்டல்கள்,
இவை எதுவுமின்றி
உன் மௌனமே
எனக்கும் உனக்குமான
உறவினை உணர்த்தியது...!
ஆம்,
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்...!

12 comments:

  1. இது தோழி ஐஸ்வர்யாவின் கவிதை...
    உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறாள்...
    தவறாமல் தெரியப்படுத்துங்கள்...

    vaninathan1015@hotmail.com

    ReplyDelete
  2. ///காதருகே ஒலிக்கும்
    பாடலின் இசையை
    உணர முடியாத நான்,
    காற்றில் கலந்து வரும்
    உன் சுவாசத்தை
    எவ்வாறு உணர்ந்தேன்..///

    ////என்னுடைய தலைசிறந்த ஆசான் நீ !
    ஆம்! உலகத்தை ரசிக்கவும்,
    கூடவே உன்னை ரசிக்கவும்
    கற்று கொடுத்தாய் அல்லவா...!/////


    மிகவும் அழகான வரிகள்...
    உங்களின் தோழி ஐஸ்வர்யாவுக்கு என் வாழ்த்துக்கள்...
    நல்ல கவிதைகளை சேகரிக்க வேண்டும் என என்னும் உங்களின் எண்ணங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. காதல் எல்லோரையும் அழகாக கவிதை எழுத வைக்கிறது. நன்றாக இருந்தது ஐஸ்வர்யா & வாணி நாதன் க்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. 2 கமலேஷ்
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழா...

    2 தமிழ் உதயம்
    வாழ்த்தியமைக்கும் வருகை தந்தமைக்கும் நன்றி தோழா... தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  5. சம்திங் சம்திங் ,சிற்பம் ,

    அன்பு ,இயல்பு ,கனவுகள்....

    அத்தனையும் அழகு .

    ReplyDelete
  6. 2 சரவன்
    தங்களில் தொடர் வருகைக்கு மிக்க நன்றி தோழா...

    ReplyDelete
  7. ஏதேதோ நினைவுகள் என் நெஞ்சை அள்ளுகிறது..

    வாணி, தயவு செய்து இப்படி எல்லாம் எழுதி எங்க மனச ஓடைகாதீங்க

    ReplyDelete
  8. உனக்கும் எனக்கும்
    கனக்கும், மிதக்கும்
    உணர்வுகளை,
    என்னவென்று சொல்ல
    என்னைவென்று
    இதயத்தில் தோற்கும்
    நீயும் நானும்
    நாமாகப் பிறந்தது
    சம்திங் சம்திங்தான்..


    மிகவும் அருமையாக இருக்கின்றது
    உங்கள் கவிதை நானும் சற்று முயற்சித்தேன் தோழி..

    ReplyDelete
  9. 2 ருத்ர வீணை
    வருகை தந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...
    தொடர்ந்து வாருங்கள்...

    2 சங்கர்
    நாங்கள் தான் உங்களைப் போல எழுத முயற்சித்தோம்...
    இருப்பினும் ஓரளவே முடிந்தது...
    உங்க அளவிற்கு முடியவில்லை என்பதே உண்மை...

    ReplyDelete
  10. படிக்கும்போதே இது உங்கள் கவிதையாக இருக்காது என்று தோன்றியது. சம்திங் சம்திங் பற்றி நீங்கள் எழுத மாட்டீர்களே...! :-)
    அருமையான கவிதை. என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் உங்கள் தோழியிடம். முடிந்தால் என் வலைப்பூ பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  11. 2 அறிவு GV
    தங்களின் தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete