Thursday, December 24, 2009

கனவுகள்

கண்களை மூடினால்
கனவு பிறக்கும்...
ஆனால்,
கண்களை திறந்தால் தான்
கனவுகள் பலிக்கும்...

4 comments:

  1. இந்த பதிவில் உள்ள எல்லா கவிதைகளும் மிக நன்றாக உள்ளது...
    அதுவும்
    கண்களை மூடினால்
    கனவு பிறக்கும்...
    ஆனால்,
    கண்களை திறந்தால் தான்
    கனவுகள் பலிக்கும்... கவிதை மிக அருமை...

    தினம் எப்படியும் மூன்று கவிதைகளாவது எழுதி விடுகிறீர்கள்.
    இந்த வற்றாத கற்பனை வளம் எல்லோருக்கும் அமைவதில்லை...
    தொடர்ந்து எழுதுங்கள்....என்ன சின்ன வருத்தம் ....
    உங்களின் வலைத்தளம் மட்டும் தனிமைலேயே இருக்கிறது....
    வாணி என்ற ஒரு பெண் இவ்வளவு அழகாக கவிதை தளம் வைத்திருக்கிறார் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை..
    உங்களின் படைப்பு அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்பது என் விருப்பம்...மற்ற வலை நண்பர்களின் தளத்திருக்கு சென்று உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக வாணியின் கவிதைகள் எப்படி பட்டவை என்று அவர்களே தெரிந்து கொள்வார்கள்.மேலும் நல்ல தரமான தளங்களின் வாசிப்பு அனுபவங்கள் உங்களின் எழுத்துக்களை மேலும் மெருகூட்டும் என்பது என் கருத்து..அதனால் மற்ற நண்பர்களின் தளங்களுடன் பின்னுட்டம் மூலம் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....நீங்கள் இடும் பின்னுட்டம் மூலமாக அவர்கள் உங்களை அடையாளம் காண உதவும்...என் கருத்து தவறில்லை என்று நம்புகிறேன்...பிழை இருப்பின் அடியேனை மன்னியுங்கள்...தோழி...

    ReplyDelete
  2. மூடிய விழிகளில்
    திறந்திடும் கனவுகள்
    கனவுகள் மெய்த்திட
    கயல்விழி திறந்திடு...

    ReplyDelete
  3. @ சங்கர்
    நன்றி தோழா...

    @ கமலேஷ்
    பாராட்டுகளுக்கு நன்றி தோழா...

    நான் கவிதை எழுதுவதேற்கென தனியே நேரம் ஒதுக்குவது கிடையாது... என்னுடைய அன்றாட பணிகளுக்கிடையே அவ்வப்போது தோன்றுவதை எழுதி வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் (அலுவலக பணி செய்து கொண்டே) வலை தளத்தில் பதிகிறேன்... வேலை நாட்களில் (Monday 2 Friday) எனக்கு கிடைக்கும் நேரம் மிகவும் குறைவே என்பதால், என்னால் மற்ற நண்பர்களில் வலைத்தளங்களை பார்வையிட முடிகிறதே தவிர பின்னோட்டம் இட முடிவதில்லை... அதக்காக மற்ற அணைத்து நண்பர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... முடிந்தவரை பின்னூட்டமிட முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  4. கவிதைகள்ள் அனைத்தும் அருமை

    ReplyDelete