Friday, November 6, 2009

ஒவ்வொரு நிமிடமும்

என்னுள் கரைந்த நீ ,
உன்னுள் தொலைந்த என்னை ,
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ,
என் மனமும் உன்னை நேசிக்கும் ,
நினைக்காத நிமிடமும்
உன் அன்பை சுவாசிக்கும் ..

4 comments:

  1. வாணி!!??

    உயிருள்ள எழுத்துக்கள்
    உயிரற்ற பார்வைகள்!!!
    உங்கள் முகம் தெரியாமல்
    அகம் புரிந்து
    நகம் சேர்த்த பின்னோட்டங்களை
    புறம் தள்ளுவதேன்???
    உரிமை இல்லையென்றாலும்
    பொறுமையுடன் கேட்கின்றேன்..
    அருமை தெரிந்து ரசித்தமைக்கு
    பதிலளிக்க உன் வார்த்தைகளுக்கு கூடவா
    வறுமை!!!

    ReplyDelete
  2. தோழரே... என்னை மன்னித்து விடுங்கள்... என் கவிதைகளைக் காட்டிலும் உங்களின் கருத்துக்களை நான் மிகவும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... சொல்ல வார்த்தைகளின்றி...

    கருத்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  3. மிக்க நன்றி வாணி,
    வலைப்பதிவில் நீங்கள்தான் எனக்கு
    முன்னோடி.
    வலையில் நான் ரசித்த முதல் கவிதை
    உங்களுடையதுதான்.
    உங்கள் கவிதைகளை பார்த்தபின்தான் என் வரிகள
    பதிவிடும் எண்ணமும் ஆர்வமும் வந்தது.
    இன்றும் நான் நீங்கள் புதியதாய் என்ன பதிவிட்டு இருக்கின்றீர்கள்என பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

    உங்கள் நட்பின் பாதையில் அன்பின் பூக்கள் மலர்ந்திட
    வாழ்த்துக்கள்.


    நன்றி...

    ReplyDelete
  4. சங்கர்... உங்களின் கருத்துகள் மிகவும் நன்றாக இருக்கின்றன... உங்களின் கவிதைகளைப் போலவே... அவைகள் எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன... நானும் உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்...

    தங்களின் இந்த ஒத்துழைப்பு இறுதி வரை கிடைக்க வேண்டுகிறேன்...

    நன்றி சங்கர்...

    ReplyDelete